மருத்துவ சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க ஒப்புதல்.?

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. எனவே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்துவந்த நிலையில் அங்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் வழங்கியதாகவும், மேலும், ரூ.5000 கோடியில் முதலீடுகள் செய்யும் 6 தொழில் நிறுவனங்களுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்ததாகவும்  தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
murugan