சொரியாசிஸிற்கு கொடுக்கப்படும் மருந்தை கொரோனா அவசர சிகிச்சைக்கு அளிக்க டி.சி.ஜி.ஐ ஒப்புதல்.!

கொரோனாவுக்கு அவசரகால மருந்தாக Itolizumab என்கிற மருந்தினை சிகிச்சைக்கு பயன்படுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) ஒப்புதல் வழங்கியுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த பயோகாம் லிமிடெட் என்கிற நிறுவனம் Itolizumab மருந்தினை 4 ஆராய்ச்சி மையங்களில் சுமார் 30 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொடுத்து அதில் முன்னேற்றம் கண்டுள்ளதாக பயோகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த Itolizumab மருந்தானது சொரியாசிஸ் பிரச்சனைக்கு கொடுக்கப்படும் மருந்தாகும்.  இந்த மருந்தை அவசர காலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்த  இந்திய மருத்துவ கட்டுப்பாடு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ ) ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த Itolizumab என்கிற மருந்தை Alzumab என்கிற பெயரில் பயோகாம் நிறுவனம் சந்தைப்படுத்த உள்ளது. இதன் ஒரு டோஸ் விலை 8000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு 4 டோஸ் Itolizumab மருந்து தேவைப்படும். அதனால் மருத்துவ செலவு 32,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.