தங்கக்கடத்தல் வழக்கு: போலி தூதரக முத்திரைகள், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல்.. விசாரணையில் வெளிவந்த பல தகவல்கள்!

தங்கக்கடத்தில் வழக்கில் கைதான ஸ்வப்னாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலி தூதரக முத்திரைகள், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் போன்ற பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு வந்த பார்சலை ஆய்வு செய்தனர். அதில் சுமார் ரூ. 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த  தங்க கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, தலைமறைவான ஸ்வப்னாவை என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர். அப்பொழுது அவர் கேரளா உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் நேரடியாகவோ, மறைமுகவாகவோ இந்த தங்கக்கடத்தலில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து, பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, பெங்களுருவில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை கைது செய்யப்பட்டார். மேலும் 10 நாள்கள் காவலில் எடுக்க என்ஐஏ மனு தாக்கல் செய்த நிலையில், ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 21 ஆம் தேதி வரை என்ஐஏ காவலில் விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.

இந்த கடத்தல் வழக்கில் என்ஐஏ விசாரித்து வருவதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இந்த வழக்கின் ஆரம்பகட்ட விசாரணையில், பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவே தங்க கடத்தல் மேற்கொண்டதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

மேலும், ஐக்கிய அரபு எமிரக தூதரகத்தின் போலி ஆவணங்களை பயன்படுத்தியதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. இந்த கடத்தலில் ஈடுபட்டவர்கள், ஐக்கிய அரபு எமிரக தூதரகத்தின் சின்னத்துடன் போலி முத்திரைகள் வைத்திருந்தாகவும், டிப்ளமேடிக் சேனல்கள் மூலம் தங்கத்தை கடத்தியதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக என்.ஐ.ஏ, இந்த வழக்கை எஃப்.ஐ.ஆர்-ஆக பதிவு செய்தது. மேலும், ஸ்வப்னா பிரபா சுரேஷ் உட்பட இந்த வழக்கு தொடர்புடைய 4 பேர் மீது 1967, சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் 16, 17 மற்றும் 18 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் கடல்வழி இடங்களிலிருந்து இந்தியாவுக்கு அதிக அளவு தங்கம் கடத்தப்படுவது தொடர்பான வழக்கு என்பதால், இது 1967 சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் 15 வது பிரிவின் கீழ், இது ஒரு பயங்கரவாத செயலாகும். மேலும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.