நான் பாஜகவில் இணைகிறேனா ? மு.க.அழகிரி பதில்

மு.க.அழகிரி பாஜகவிற்கு வந்தால் வரவேற்போம் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறிய நிலையில், நான் பாஜகவில் சேரவுள்ளேன் என சிலர் காமெடி செய்துக்கொண்டு இருக்கின்றனர் என்று அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,தற்போது தனிக்கட்சி குறித்து மு.க.அழகிரி ஆலோசனை ஈடுபட உள்ளதாக தெரிவித்து உள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது. ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் மு.க. அழகிரி பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகவும் கலைஞர் பெயரில் இந்த அமைப்பு அல்லது கட்சி இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.ஆனால் மு.க.அழகிரி தரப்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் அளிக்கப்படவில்லை.

இதனிடைய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அழகிரி குறித்து கூறுகையில், மு.க.அழகிரி பாஜகவிற்கு வந்தால் வரவேற்போம் .பாஜகவில் இணைவது தொடர்பாக மு.க.அழகிரியுடன் இதுவரை பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை என்றும் கூறினார்.இந்நிலையில் மு.க.அழகிரி கூறுகையில்,”அரசியல் நிலைப்பாடு குறித்து எந்தவொரு ஆலோசனையும், திட்டமிடலும் நடத்தவில்லை”. நான் பாஜகவில் சேரவுள்ளேன் என சிலர் காமெடி செய்துக்கொண்டு இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment