நாளை மாலை 6 மணி முதல் இவை அனைத்திற்கும் அனுமதி கிடையாது -தேர்தல் ஆணையம் உத்தரவு

38

வருகின்ற 18-ம் தேதி மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடக்க உள்ளதால் வேட்பாளர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்களுக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதி நாளை மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

நாளை மாலை 6 மணி முதல் 18-ம் தேதி வாக்குப்பதிவு முடிவடையும் வரை தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக் கூடாது.

மேலும்  நாளை மாலை 6 மணி முதல் திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக பிரசாரம் செய்யக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.