அதிமுக கலவர வழக்கு.! 100 நபரை அடையாளம் கண்டது சிபிசிஐடி.! விரைவில் விசாரணை.!

ஜூலை 11ஆம் அதிமுக அலுவலக வளாக பகுதியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து 100 நபர்களை சிபிசிஐடி போலீசார் கண்டறிந்து உள்ளனர். 

கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை அதிமுக அலுவலகத்தில் ஒரு பெரிய கலவரமே நடைபெற்றது. அன்றைய தேதி தான் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் அதிமுக கழக வளாகத்தில் கற்களால் மோதிக்கொண்டனர். அன்று தான் இபிஎஸ் தலைமையில் பொதுக்குழு நடைபெற்று இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

பொதுக்குழு நடைபெற்ற அந்த ஜூலை 11ஆம் தேதி ஏற்பட்ட கலவரத்தில், பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது. கார் காண்ணாடிகள் உடைக்கப்பட்டது. அதிமுக அலுவலகம் சேதப்படுத்தப்பட்டது. கற்களால் இருதரப்பினரும் எதிரெதிரே தாக்கி கொண்டனர்.

இது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே அதிமுக அலுவலகத்திற்கு 20 சிபிசிஐடி போலீசார் சென்று கைரேகை, சிசிடிவி போன்றவற்றை ஆராய்ச்சி செய்தனர்.

அதன்படி தற்போது 100 நபர்களை சிபிசிஐடி போலீசார் அடையாளம் கண்டு கொண்டுள்ளனர். அவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். யார் முதலில் கல்லெறிந்தார்கள். யார் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தினார்கள் என்பதை கண்டறிந்து சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment