அதிமுக பொதுக்குழு வழக்கு… ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை நிராகரிப்பு..!

சென்னையில் கடந்த 2022 -ம் ஆண்டு ஜூலை மாதம் 11 -ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமை கொண்டு வருவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை எதிர்த்தும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்து உயர் நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்- 25 ஆம் தேதி தீர்ப்பளித்து மேல்முறையீட்டு வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக பொது குழு தீர்மானங்கள் செல்லும் என்று உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

சூடுபிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல்…. திமுக சார்பில் தேர்தல் பணி குழு அறிவிப்பு!

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக பொதுக்குழு வழக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடைவிதித்தால் அதிமுகவின் நிலை இன்னும் மோசமாகிவிடும். அதிமுகவில் பிளவு இருப்பதாக தெரிகிறது. அதற்கு கட்சியை தீர்வு காண வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

author avatar
murugan