அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார்!!

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் அதிமுக நிர்வாகிகள் உட்பட 900 பேருடன் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வில் ய திமுக நிர்வாகிகளான அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திமுகவில் இணைந்தபின் பேசிய தோப்பு வெங்கடாசலம், வரும் உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் திமுக 100% வெற்றியை ஈட்டும் என்றும் ஈரோடு மாவட்ட திமுக ஒரு ஆலமரம், இதில் நாங்கள் ஒரு பறவைகள் போல் அடைக்கலம் தேடி வந்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதி எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலத்திற்கு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பு வழங்காமல், அவருக்கு பதிலாக ஜெயகுமார் என்பவரை களமிறக்கியது. இதனால் தோப்பு வெங்கடாசலம் பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்து தேர்தலில் போட்டியிட்டார்.

ஆனால், தேர்தலில் அவருக்கு தோல்வியே கிடைத்தது. சுயேட்சையாக போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் 9 ஆயிரத்து 791 வாக்குகளை மட்டுமே பெற்றார். அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார்தான் வெற்றி பெற்றார். தேர்தலில் சீட் தராததால் தனியாக நின்று போட்டியிட்டதால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் தோப்பு வெங்கடாசலம். 2011ல் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் தோப்பு வெங்கடாசலம் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்