அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் 500, 1000 ஓட்டுகள்தான் கிடைக்கும்-அதிமுக எம்.எல்.ஏ பரபரப்பு தகவல்

  • ஜெயலலிதாவை எதிர்த்து சட்டப்பேரவையில் மக்களுக்காக குரல் கொடுத்தவர் விஜயகாந்த்  என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
  • அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் 500, 1000 ஓட்டுகள்தான் கிடைக்கும்  என்று அதிமுகவின் சூலூர் எம்எல்ஏ கனகராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் பாமக-பாஜக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது.

ஆனால் அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது .

Image result for premalatha vijayakanth

அதேபோல் தேமுதிக மூத்த நிர்வாகிகள் சிலர் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்தனர். முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன், இளங்கோவன் உள்ளிட்டோர் துரைமுருகன் வீட்டுக்கு சென்று சந்தித்தனர்.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் பின்னர் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில்,எங்களிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தே.மு.தி.க நிர்வாகிகள் வந்தனர்.எங்களிடம் கொடுக்க தொகுதி இல்லை என்று தெரிவித்தேன்.அதிமுக உடனான தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏதோ தவறு உள்ளது.அதேபோல் சுதீஷ் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் பொழுது  பலமுறை தொடர்பு கொண்டு என்னிடம்  பேசினார்  என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

Image result for premalatha vijayakanth

இந்நிலையில் நேற்று  கூட்டணி தொடர்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விளக்கம் அளித்தார்.அதில் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை,குழப்பமுமில்லை.அரசியல் ரீதியாக தேமுதிகவை திமுக பழிவாங்குகிறது.திமுக, அதிமுக என இரு தரப்பினரிடமும் தேமுதிக பேசியதாக எழுப்பப்படும் கேள்வியே தவறானது.கலைஞர் உடல்நலம் இல்லாத போது சந்திக்க விஜயகாந்த் அனுமதி கேட்டார். ஆனால் ஸ்டாலின் அனுமதி கொடுக்கவில்லை. .தேமுதிகவை தொடர்ந்து பழிவாங்கும் நோக்கத்தோடு திமுக செயல்பட்டு வருகிறது.துரைமுருகன் பேசியது வெட்கக்கேடானது. உட்கார்ந்த இடத்திலிருந்து அவர் தூங்குவார் என்று கேள்விப்பட்டிருக்கேன். அதற்காக இப்படியா உளற வேண்டியது. திமுக என்றாலே “தில்லுமுல்லு கட்சி” என்று அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.

எதிரியாக இருந்தாலும் வரவேற்பதுதான் தமிழர் பண்பாடு .துரைமுருகன் நடந்து கொண்டது சரியில்லை.

தேமுதிக கொள்கையில் உறுதியாக உள்ளது, நாடாளுமன்ற தேர்தல் என்பதால் ஏதேனும் ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்து ஆக வேண்டும் .கடந்த தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற்ற அதிமுக எம்.பி.க்களால் தமிழகத்திற்கு என்ன பலன் கிடைத்தது.

ஜெயலலிதாவை எதிர்த்து சட்டப்பேரவையில் மக்களுக்காக குரல் கொடுத்தவர் விஜயகாந்த். அதிமுக ஆட்சி தொடர தேமுதிக கூட்டணி வைத்தது தான் காரணம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் பிரேமலதா கருத்து தொடர்பாக அதிமுகவின் சூலூர் எம்எல்ஏ கனகராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  சட்டப்பேரவையில் நாகரீகம் இல்லாமல் விஜயகாந்த் பேசியதே தேமுதிக வீழ்ச்சிக்கு காரணம். அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் 500, 1000 ஓட்டுகள்தான் கிடைக்கும் .தேமுதிக இரு கட்சிகளுடனும் பேசுவது மிகப்பெரிய தவறு என்று அதிமுகவின் சூலூர் எம்எல்ஏ கனகராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏ இவ்வாறு கூறியது தேமுதிகவினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment