டெங்கு காய்ச்சலால் பாதிப்பு! 2வது போட்டியிலும் கில் கிடையாது.. சென்னை மருத்துவமனையில் அட்மிட்!

உலகக்கோப்பை போட்டிகளை தவறவிடும் வகையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இந்திய வீரர் சுப்மான் கில் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான 24 வயதுடைய இளம் வீரர் சுப்மான் கில் கடந்த ஒரு ஆண்டாக அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல், தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் விளையாடி வரும் அவர், உடற்தகுதியிலும் தன்னை நிரூபித்து வருகிறார்.

ஒருநாள் போட்டியில் 5 சதங்களை விளாசியுள்ளார். இதனால், இந்திய தற்போது நடைபெற்று வரும் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில்லுக்கு சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. அவரும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருந்தார். இந்த சூழலில், திடீரென சுப்மான் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதால், சென்னையில் நடந்த இந்தியா – ஆஸ்திரேலியா போட்டியில் பங்கேற்கவில்லலை. இவருக்கு பதிலாக இந்திய அணியில் ரோஹித் சர்மாவுடன், இஷான் கிஷான் களமிறங்கினார்.

அதுமட்டுமில்லாமல், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சுப்மான் கில்லின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால், அடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டது. சுப்மான் கில் தொடர்ந்து சென்னையில் இருப்பார் என்றும் அவரது உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், உலகக் கோப்பை போட்டியை தவறவிடும் விதமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுப்மான் கில் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், நாளை நடைபெற உள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் 2வது லீக் போட்டியில் பங்கேற்க டெல்லிக்கு செல்லவில்லை.

கில்லின் பிளேட்லெட் எண்ணிக்கை இப்போது குறைவாக உள்ளது, அதனால்தான் அவர் விமானத்தில் ஏறுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொடக்க ஆட்டக்காரரை, பிசிசிஐ மருத்துவர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். மேலும் கூறுகையில், சுப்மான் கில் உடல்நிலை சீராக உள்ளது. சோர்வு மற்றும் காய்ச்சலுக்கு, உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என காவேரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்