24 ஆம் தேதி அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம்

வருகின்ற 24 -ஆம் தேதி அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம்  நடைபெரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.அதிமுக கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 24-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது.அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.