பட வாய்ப்பு கூடுது சம்பளம் கூடவில்லையே! வேதனையில் நடிகை அதிதி ஷங்கர்?

Aditi Shankar : நடிகை அதிதி ஷங்கருக்கு பட வாய்ப்புகள் குவிந்தாலும் சம்பளம் இன்னும் லட்ச கணக்கில் வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிதி ஷங்கரை இயக்குனர் ஷங்கர் மகள் என்று கூறுவதை விட லக்கி ஹீரோயின் என்று அவரை கூறலாம். ஏனென்றால், அவருக்கு அந்த அளவுக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு இருக்கிறது. முதல் படத்திலே அவருக்கு கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு  கிடைத்தது. அதன் பிறகு அவருக்கு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க மாவீரன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த இரண்டு திரைப்படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், அடுத்ததாக அதிதி ஷங்கருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் தற்போது அவர் விஷ்னு விஷால் இயக்கத்தில் ஆதர்வாவின் தம்பி ஆகாஷ் ஹீரோவாக நடித்துள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து அதர்வாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.

இப்படி தொடர்ச்சியாக படங்களில் நடித்து வரும் நடிகை அதிதி ஷங்கர் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்று உங்களுக்கு தெரியுமா? அவருடைய சம்பளம் கோடி கணக்கில் எல்லாம் இல்லயாம். ஒரு படத்தில் நடிக்க 20 லட்சத்தில் இருந்து 30 லட்சம் வரை தான் சம்பளம் வாங்கி வருகிறாராம். அவர் நடித்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், கூட அவர் தனது சம்பளத்தை உயர்த்தவில்லையாம்.

இனிமேல் நடித்த படங்கள் வெளியாகி அதில் கிடைக்கும் வரவேற்பை பார்த்துவிட்டு தான் சம்பளத்தை உயர்த்தும் எண்ணத்தில் அதிதி ஷங்கர் இருக்கிறாராம். இருப்பினும் பட வாய்ப்புகள் இருந்தாலும் லட்ச கணக்கில் சம்பளம் வாங்குகிறோம் என்ற வருத்தமும் அதிதி ஷங்கர் மனதில் இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.