பள்ளி, கல்லூரி நேரத்தில் கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை – அமைச்சர் சிவசங்கர்

அரசு பேருந்துகளை மக்கள் பயன்படுத்த வேண்டும்.சிலர் தெரிந்தே, கூடுதல் கட்டணம் செலுத்தி தனியார் பேருந்துகளில் பயணிக்கின்றனர் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதால் விபத்துகள் ஏற்படுகிறது. இ விபத்தினை தவிர்க்க பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதலாக பேருந்துகள் இயக்குமாறு கோரிக்கைகள் எழுந்தது.

இந்த நிலையில், இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர், தமிழகத்தில் 21,000 பேருந்துகள் இருக்கிறது. பண்டிகை காலங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அரசு பேருந்துகளை மக்கள் பயன்படுத்த வேண்டும்.சிலர் தெரிந்தே, கூடுதல் கட்டணம் செலுத்தி தனியார் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.

பள்ளி, கல்லூரி நேரத்தில் கூடுதலாக பேருந்து தேவை என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது; புதிகதாக பேருந்து ஓட்டுநர்கள், நடத்ததுநர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளது. கூடுதல் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment