,

ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு நிதி சுமை – முதல்வர் மு.க.ஸ்டாலின்

By

ஜிஎஸ்டி அமலான பிறகு மாநில அரசுகளின் நிதிச்சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. 

   
   

கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 6 மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொண்டனர். இந்த  கூட்டத்தில்,மாநில எல்லை விவகாரங்கள், நதிநீர் பங்கீடு, கடலோர பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் பாதிப்புகளுக்கான நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்; மின்வாரிய தகுதி மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது; ஜிஎஸ்டி அமலான பிறகு மாநில அரசுகளின் நிதிச்சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

Dinasuvadu Media @2023