பீஸ்ட் படப்பிடிப்பில் இணைந்த நடிகைகள்.!

நடிகை பூஜா ஹெக்டே மற்றும் மலையாள நடிகை அபர்ணா தாஸ் பீஸ்ட்  படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக சென்னையில் பிரமாண்ட செட் அமைத்து நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் சென்னையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அதிரடி சண்டைக்காட்சிக்காக படக்குழு ரஷ்யா செல்லவுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது இன்று நடிகை பூஜா ஹெக்டே மற்றும் மலையாள நடிகை அபர்ணா தாஸ் பீஸ்ட்  படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. படத்தின் இரண்டு லுக் போஸ்டர் வெளியான நிலையில், விரைவில் படத்தின் முதல் பாடலுக்கான அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.