சொத்து குவிப்பு வழக்கு – ஆ.ராசா உள்பட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

சொத்து குவிப்பு வழக்கில் ஆ.ராசா உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்.

கடந்த 2015-ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆ.ராசா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 16 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது. இதன்பின் ஆ.ராசாவுக்கு சொந்தமான தமிழகம், டெல்லி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

இதனிடையே, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஒரு சில ஆவணங்கள் தான் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கை தொடங்க காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் ஆ.ராசா உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில், ரூ.5.53 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் சிபிஐ தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment