பெங்களூருவில் பா.ஜ.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று கூடுகிறது….!!

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான பா.ஜ.கவின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக ஜன.11ஆம் தேதி பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்காக பாஜக செய்துள்ள முன்னேற்பாடுகள், வெற்றி பெறக்கூடிய தொகுதிகள் உள்ளிட்ட விவரங்களை கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷாவிடம் அறிக்கையாக அளிக்க எடியூரப்பா திட்டமிட்டுள்ளார்.
இதற்காக பெங்களூருவில் இன்றும் நாளையும் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு எடியூரப்பா ஏற்பாடு செய்துள்ளார். இக்கூட்டத்தில் பாஜக வெற்றி பெறக்கூடிய தொகுதிகள், போட்டியிடுவதற்கு தகுதியான வேட்பாளர்கள், பிரச்சார வியூகங்கள் போன்றவை குறித்து விவாதிக்கப்படவுள்ளன.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment