சைப்ரஸில் 6.4 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

சைப்ரஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சைப்ரஸ் நாட்டில் நிகோஸியா அருகே உள்ள கடல் பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

புவி அறிவியலுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையத்தின் (GFZ) கூற்றுப்படி, நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3:07 மணிக்கு 62 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும்,நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் வெளியாகவில்லை.