ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட எம்எல்ஏ உடல் ஒப்படைப்பு ..! 144 தடை உத்தரவு பிறப்பிப்பு ..!

இன்று காலை சர்வேஸ்வர ராவின் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆந்திர விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு தொகுதியை சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர் கிடாரி சர்வேஸ்வர ராவ் ஆவார்.இவர் தெலுங்கு தேசம் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார்.இதற்கு முன் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார் .இந்நிலையில் இவர் அரக்கு தொகுதியில் உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவேரி சோமாவுடன் சென்றுள்ளார்.அப்போது தும்பரிகூட மண்டல் என்ற இடத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சட்ட மன்ற உறுப்பினர் கிடாரி சர்வேஸ்வர ராவ் உயிரிழந்தார்.அதேபோல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவேரி சோமா சுட்டுக்கொள்ள்ளப்படடார்.மேலும் உடன் சென்ற பாதுகாவலரும் சுட்டுக் கொல்லப்பட்டார் .

இதனால் கிடாரி சர்வேஸ்வர ராவ் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் தும்ரிகுடா காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று காலை சர்வேஸ்வர ராவின் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர்,  அரகு பகுதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.மேலும் விசாகப்பட்டினத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மாவோயிஸ்டுகளை வேட்டையாட போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

Leave a Comment