கிராம்பு எண்ணெயின் மருத்துவ குணங்கள் :

கிராம்பு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இது நம் சமையலில் பயன்படுத்துகிற ஒரு பொருள். இது சமையல் பொருளாக மட்டுமல்லாமல் மருந்து பொருளாகவும் பயன்படுகிறது. இது பிரியாணி போன்ற சில உணவு பொருள்களில் பயன்படுகிறது. ஆனால் இது சிறந்த மருந்து பொருளாகவும் தற்போது பயன்படுகிறது.

கிராம்பை விட, கிராம்பு எண்ணையை பயன்படுத்தும் போது அதிலுள்ள முழுமையான மருத்துவ குணங்களை பெற முடிகிறது. இதிலுள்ள பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இதனை மிகசிறந்த மருந்து பொருட்களில் ஒன்றாக மாற்றியுள்ளது.

  • இது பற்களுக்கான பிரச்சனைகளுக்கு மிகச் சிறந்த தீர்வை தருகிறது.
  • நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
  • மாரடைப்பு மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும் நோய் கிருமிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது.
  • இது உடலில் உள்ள இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க செய்கிறது.
  • தொற்று நோய்களுக்கு எதிராக செயல்படும் ஆற்றல் இதில் அதிகமாக உள்ளது.
  • சளி, இருமல் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுதலை தருகிறது.
  • சரும ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
  • செரிமான பிரச்சனைகளை தடுக்கிறது.
  • அழகிய கூந்தலவளர உதவுகிறது.
  • இரத்தத்திலுள்ள நச்சுக்களை நீக்குகிறது.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment