அமிதாபச்சனுடன் பாலிவுட்டில் பலமாக காலூன்றும் எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே சூர்யா இயக்குனராக சாதித்ததை விட ஒரு நடிகனாக பெரிய இடத்திற்க்கு சென்று வருகிறார். தற்போது அது பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நடிக்குமளவிற்கு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
ஆம் தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் அமிதாபச்சன் நடிக்கும் உயர்ந்த மனிதன் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்க உள்ளார். இப்படத்தின் மூலம் முதன் முறையாக பாலிவுட்டில் தடம் பதிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இப்படத்தை கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்குகிறார். இப்படத்திற்க்கு அமிதாப் 40 நாட்கள் கால்சீட் கொடுத்துள்ளார். இப்பட தலைப்பை நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டு அமிதாப்பிற்க்கு வாழ்த்தும் தெரிவித்தார்.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment