குஜராத்திற்கு மட்டும் ஏன் இன்னும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை….?

வருகிற டிசம்பர் 18ஆம் தேதிக்குள் ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்திற்கு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் இன்று தேர்தல் கமிஷன் ஹிமாச்சல் தேர்தல் அட்டவணையை மட்டும் அறிவித்துவிட்டு, குஜராத் தேர்தலை அறிவிக்கவில்லை.
நவம்பர் 9ஆம் தேதி ஹிமாச்சலில் தேர்தல் நடை பெறும் என்றும், ஆனால், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி ஒருவர் இது காலம் வரை 6மாத காலத்திற்குள் தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் அட்டவணை அறிவிப்பது வழக்கம். அதற்கு மாறாக குஜராத்திற்கு தேர்தல் அட்டவணை இன்று அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அந்த முன்னாள் தலைமை அதிகாரி இன்று தேர்தல் அட்டவணை அறிவித்தால் இன்றிலிருந்து தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துவிடும்.
ஆனால், பிரதமர் இந்த மாதம் 16ஆம் தேதி மீண்டும் குஜராத்திற்கு சென்று பல புதிய திட்டங்களை அறிவிக்கவுள்ளதாக வந்த  தகவல்கள் அடிப்படையில் தேர்தல் கமிஷன் குஜராத்திற்கு மட்டும்  தேர்தல் அட்டவணை வெளியிடாதது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், ஹிமாச்சல் தேர்தலுக்கும் முடிவு அறிவிப்புக்கும் இடையே ஒரு மாத கால இடைவெளி என்பது குஜராத் தேர்தல் அந்த இடைவெளியில் நடத்தப்படும் என்பதற்கான அறிகுறி என்றும் அவர் தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment