நடிகர் சங்க நிர்வாகக் குழுவில் பெண்களுக்கு 5௦ சதவீத இட ஒதுக்கீடு கொடுங்கையா கொந்தளித்த நடிகை…!

கேரளாவில் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்பத்திற்கு உள்ளாக்க முயற்சித்த சம்பவத்தைத் தொடர்ந்து மலையாள சினிமா நடிகைகள் மற்றும்  திரையுலகின் பல்வேறு அமைப்புகளில் உள்ள பெண்களையும் இணைத்து WCC என்கிற பெண்கள் நலப் பாதுகாப்பு அமைப்பை தொடங்கி உள்ளனர்.
இதனால் தங்களது பாதுகாப்பை உறுதிச் செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவும் அவர்கள் முடிவு எடுத்துள்ளனர்.
இந்த அமைப்பில் மஞ்சு வாரியார், பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட முன்னணி மலையாள நடிகைகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த அமைப்பின் சார்பில் தற்போது,மலையாள நடிகர் சங்க நிர்வாகக் குழுவில் பெண்களுக்கு 5௦ சதவீத இட ஒதுக்கீடு தர வேண்டும் என்ற கோரிக்கையை உயர்த்திப் பிடித்துள்ளார் நடிகை ரம்யா நம்பீசன்.
இதுபற்றி மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வுக்கும் கடிதம் எழுதியுள்ளார் ரம்யா நம்பீசன்.
அதில், ‘ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ள நடிகர் சங்க நிர்வாக குழுவில், இனி பாதிக்குப் பாதி பெண்கள் இருந்தால்தான் எங்களுக்கான பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்த முடியும்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.