அரசியல் காழ்புணர்ச்சியால் வழக்கு – அமைச்சர் கீதா ஜீவன்

அரசியல் காழ்புணர்ச்சியால் சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது என அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு.

கடந்த 1996 முதல் 2001 வரை திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக அப்போது இருந்த அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை பெரியசாமி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் கீதா ஜீவன், அவரது தம்பி ஜெகன் உள்பட 5 பேர் குற்றச்சாட்டப்பட்டவர்களாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த சமயத்தில் சொத்து குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட அமைச்சர் கீதா ஜீவன், அவரது தம்பி ஜெகன் உள்பட 5 பேரை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று விடுவித்தது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், 2001 வரை என்னுடைய தந்தை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

ஆட்சி மாற்றத்திற்கு பின்பு அப்போதைய அதிமுக அரசு பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், அரசியல் காழ்புணர்ச்சியில் சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. 21 ஆண்டுகளுக்கு பின்பு அந்த வழக்கு இன்று முடிவு பெற்றுள்ளது. இதன்மூலம் நீதி கிடைத்துள்ளது நியாயம் விளங்கியுள்ளது என தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment