கோத்ரா கலவரம் திட்டமிடப்பட்டது – முன்னாள் குஜராத் முதல்வர் பரபரப்பு தகவல்!

கோத்ரா ரயில் எரிப்பு 2002 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக முன்கூட்டியே தீட்டிய திட்டம் என பரபரப்பு தகவல்.

2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டு ஒன்று என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சங்கர்சிங் வகேலா பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், 2002-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே கலவரம் உருவாக்கப்பட்டது. தீ பிடித்து எரிந்த அந்த ரயில் பெட்டியில் இந்து யாத்ரீகர்கள் இருந்தது ஆர்ஆர்எஸ் தொண்டர்களுக்கு தெரியும் என கூறினார்.

ரயில் பெட்டி உள்ளே இருந்து தான் எரிக்கப்பட்டது, வெளியில் இருந்து அல்ல, தேர்தல் ஆதாயத்துக்காகவே கோத்ரா கலவரம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வர, கோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி மற்றும் 59 பேர் 2002 பிப்ரவரி 26 அன்று எரித்துக் கொல்லப்பட்டனர். இதனால், கோத்ரா ரயில் எரிப்பு 2002 சட்டமன்றத் தேர்தலில் மோடி மற்றும் பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக முன்கூட்டியே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக வகுப்புவாத கலவரத்தை உருவாக்க திட்டமிட்டு செய்யப்பட்டது என குற்றசாட்டினார். இதனிடையே, 141 பேர் உயிரிழந்த #MorbiBridgeCollapse தொடர்பாக தானாக முன்வந்து வழக்கைத் தொடங்குமாறு குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு மூத்த தலைவரும், குஜராத் முன்னாள் முதல்வருமான சங்கர்சிங் வகேலா கோரிக்கை விடுத்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment