#Breaking:சற்று முன்…இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரியவருக்கு ரூ.25,000 அபராதம் – நீதிமன்றம் போட்ட உத்தரவு!

அதிமுக பொதுக்குழு ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் காரணமாக இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி முன்னாள் அதிமுக உறுப்பினர் ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அதில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு ஈபிஎஸ் ரூ.5 ஆயிரம் கோடி வரை செலவு செய்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்ததாகவும்,மேலும்,ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆகியோருக்கு இடையிலான உட்கட்சி மோதல் முடிவுக்கு வரும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஜூன் 28 ஆம் தேதி தான் மனு அனுப்பிய நிலையில்,இதுவரை எந்த பதிலும் இல்லை என்றும்,எனவே,தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட மனு தொடர்பாக நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.மேலும்,விளம்பர நோக்கத்துடன் மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளார் என்று கூறி,இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி வழக்கு தொடர்ந்த முன்னாள் அதிமுக உறுப்பினர் ஜோசப்புக்கு ரூ.25,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Comment