முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு விழா…! முக்கிய அம்சங்கள் என்னென்ன…?

முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு விழாவின் முக்கிய அம்சங்கள்.

சென்னை கிண்டியில் உலா நட்சத்திர விடுதியில் ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு’ என்ற விழா தொடங்கியுள்ளது. இந்த விழாவானது தமிழக அரசின் தொழில்துறை சார்பாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய அதிகாரிகள் சிலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த விழாவில் உள்ள 3 முக்கிய அம்சங்கள்: 

  • ரூ.11,141 கோடி மதிப்பீட்டில், 37 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதன் மூலம் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
  • புதிதாக ரூ.4,250 கோடி மதிப்பில் 9 தொழில் நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. இதன்மூலம் 21,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
  • கடந்த ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட திட்டங்கள், நிறைவு பெற்று அந்த பணிகள் செயல்பட தொடங்கியுள்ளது. ரூ.7,111 கோடி  மதிப்பில், 5 நிறுவனங்களின் திட்ட பணிகள் தொடக்கி வைக்கப்படுகிறது. இதன் மூலம், 6,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ரூ.28,508 கோடி மதிப்பில், மொத்தம் 49 திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுகிறது. இதன் மூலம் 83 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.