தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்கும், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மத்திய சுகாதாரத்துறை  அமைச்சரை சந்தித்து பேசவுள்ளனர். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், கொரோனா ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டு இருப்பதால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது .

அதன்படி, திருமணம் மற்றும் இறுதிச் சடங்கில் பங்கு பெற கட்டுப்பாடுகள் அரசியல் கூட்டங்களுக்கு தடை உள்ளிட்டவை பின்பற்றப்படுகிறது. இதை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும்,  அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்கள் மூலம் மூன்றாவது அலைக்கு வழிவகுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி, நீட் தேர்வு விலக்கு, செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் உள்ளிட்ட 13 கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய அரசிடம் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.