சாக்லேட் பிரியர்களே உஷார் : குறிப்பாக பெண்கள்

சாக்லெட் உலகில் பிரபலமான நிறுவனமான காட்பரி நிறுவனம் தனது சாக்லேட் தயாரிக்கும் உரிமையை மாண்டலெஸ் இந்தியா நிறுவனத்திடம் கொடுத்துள்ளது.
தற்போது தரம் குறைந்த சாக்லேட் தயாரித்து விற்பனை செய்ததின் காரணமாக அந்நிறுவனத்துக்கு ரூ 5௦,௦௦௦ அபராதத்தினை நுகர்வோர் நீதிமன்றம் விதித்துள்ளது.

குண்டூரை சேர்ந்த தார்லா அனுபமா என்பவர் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் உள்ளூர் கடை ஒன்றில் கட்பெரி சாக்லேட் வாகயுள்ளார். இந்த சாக்லேட்-ஐ சாப்பிட்ட அவரது உறவினர்கள் வாந்தி எடுத்துள்ளனர். இதனால் மற்றொரு சாக் லேட் பாகெட்டை வாங்கி  பிரித்து பார்த்ததில் தரமற்ற, புழு இருந்துள்ளது. இதனை புகைப்படத்துடன் மாண்டலெஸ் நிறுவனத்துக்கு  புகார்  அனுப்பியுள்ளார்.

அவரை தொடர்பு கொண்ட காட்பரி நிறுவன அதிகாரிகள் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த  வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதனால் அனுபமா நுகர்வோர் நீதிமன்றத்தில் காட்பரி நிறுவனம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஆகஸ்ட் மாதம் வழக்கு  ஒன்றை  தொடர்ந்தார்.

விசாரணையில், நிறுவனத்தின் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர்  உள்நோக்கதுடன் புகார் அளித்துள்ளதாக  குறிப்பிட்டார்.
 ஆனால் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட புகார்  மற்றும் நிறுவன அதிகாரிகள் சாக்லேட் மாதிரியை சோதனைக்கு எடுத்துச் சென்றதை மறுத்து பேசவில்லை.

இந்நிலையில் தீர்ப்பு வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருப்பதாவது ரூ 5௦,௦௦௦-மும், வழக்கு செலவுகளுக்கு ரூ 5,௦௦௦-மும்
இரண்டு சாக்லேடுக்கான ரூ9௦-உம் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்க வேண்டும். 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment