பிப்ரவரி இறுதியில் ராகுல்காந்தி தமிழகம் வருகை – கே.எஸ்.அழகிரி தகவல்

வருகின்ற 27-ஆம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வந்து ,மக்கள் பிரச்சனைகள் குறித்து கேட்டறிய உள்ளார் என்று  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ,அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன.தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக ,திமுக ,மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தொடங்கி உள்ளன.அந்த வகையில் தேசிய கட்சியான காங்கிரஸ் ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

அதன்படி  பொங்கல் தினத்தன்று தமிழகம் வந்த ராகுல் காந்தி மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்றார்.பின் கடந்த ஜனவரி 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை மீண்டும் தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.மூன்று நாட்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி ஈடுபட்டார்.

இந்நிலையில் பிப்ரவரி 27, 28 & மார்ச் 1 ஆகிய நாட்களில் ராகுல் காந்தி தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு வர உள்ளார் என்று  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அங்கு மக்கள் பிரச்சனைகள் குறித்து கேட்டறிய உள்ளார் பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தார்.ஆனால் அவர் பொதுமக்கள் யாரையும் சந்திக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.