மாடர்னா கொரோனா தடுப்பூசியின் விலை என தெரியுமா.?

கொரோனா தடுப்பூசியை ரூ.1,850 முதல் ரூ.2,750 விற்க இருப்பதாக மாடர்னா தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

மாடர்னா தனது கொரோனா தடுப்பூசியை ஒரு டோஸுக்கு 25 முதல் 37 டாலர் வரை கட்டணம் வசூலிக்கபடும் என்றும் இது உத்தரவிடப்பட்ட தொகையைப் பொறுத்து என்று மாடர்னா தலைமை நிர்வாகி ஸ்டீபன் பான்செல் ஜெர்மன் வார இதழான வெல்ட் அம் சோன்டாக் (வாம்ஸ்) இடம் கூறினார்.

கடந்த திங்கட்கிழமை, பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஒரு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி, ஐரோப்பிய ஆணையம் தனது தடுப்பூசி வேட்பாளரின் மில்லியன் கணக்கான டோஸை ஒரு டோஸுக்கு 25 டாலருக்கும் குறைவான விலைக்கு வழங்குவதற்காக மாடர்னாவுடன் ஒரு ஒப்பந்தம் போடவுள்ளதாக கூறினார்.

ஆனால், எதுவும் இதுவரை கையெழுத்திடப்படவில்லை, நாங்கள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்துடன் ஒரு ஒப்பந்தத்திற்கு நெருக்கமாக உள்ளோம். நாங்கள் ஐரோப்பாவிற்கு வழங்க விரும்புகிறோம்,ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் என்று பான்செல் வாம்ஸிடம் கூறினார்.

இதற்கிடையில், மாடர்னா நிறுவனம் தயாரித்த தடுப்பூசி94.5% பயனுள்ளதாக இருக்கும் என்று மாடர்னா கூறியுள்ளது. இது ஒரு தாமதமான மருத்துவ பரிசோதனையின் இடைக்கால தரவுகளின் அடிப்படையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment