26 C
Chennai
Wednesday, November 25, 2020

சட்டமன்ற தேர்தலில் 40 தொகுதிகள் வேண்டும் ! அதிமுகவிடம் கேட்கும் பாஜக ?

- Advertisement -
- Advertisement -

வருகின்ற சட்டமன்ற தேர்தலில்,அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என பன்னீர்செல்வம்  மற்றும் பழனிசாமி ஆகிய இருவரும் தெரிவித்த நிலையில் ,அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 40 சட்டமன்ற தொகுதிகளை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தலில் கூட்டணி : 

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக அதிமுக-பாமக-பாஜக பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தத்தின் படி பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.ஆனால் பாஜக போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.

அதிமுக தேர்தலுக்கு தயார்  :

அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றது.அந்த வகையில் தமிழகத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவும் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி உள்ளது.ஆகவே அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமித் ஷா வருகையும், எதிர்பார்ப்பும் : 

இதனிடையே தான் பாஜகவின் மூத்த தலைவராகவும் ,மத்திய அமைச்சரான அமித் ஷா தமிழகத்திற்கு வருகை தந்தார்.இவரது வருகை  தமிழக அரசியலில்  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.ஏனென்றால் அதிமுக – பாஜக கூட்டணி இடையே சற்று சலசலப்பு நிலவி வந்தது.இதனால் அதிமுக -பாஜக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்பு மிகவும் குறைவு எனவும் செய்திகள் உலாவந்தது.

பாஜக-கூட்டணி உறுதி :

ஆனால் நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் தான் அதிமுக – பாஜக கூட்டணி  வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ,இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்தனர்.மேலும் அமித் ஷாவும் தனது பங்கிற்கு பேசுகையில், அதிமுக ஆட்சிக்கு பாறை போல நாங்க உறுதியாக இருப்போம் என்று பேசினார்.இதனால் அதிமுக -பாஜக கூட்டணி உறுதியானது.

பாஜக தரப்பில் 40 தொகுதிகள் வரை கேட்கப்பட்டதாக தகவல் :

நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தான் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். பின்னர் முதல்வரும், துணை முதல்வரும் உள்துறை அமைச்சர் நேரில் சந்தித்தனர்.இந்த சந்திப்பில் தேர்தல் குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.அதிலும் குறிப்பாக அதிமுக கூட்டணியில் பாஜக தரப்பில் 40 தொகுதிகள் வரை கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் அதிமுக தரப்பில் 25 தொகுதிகள் வரை கொடுப்பதாக உறுதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் அதிமுக தலைமை ,கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

- Advertisement -

Latest news

6 மணி நேரத்திற்கு நின்று தாக்கும் நிவர்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இன்று இரவு நிவர் புயல் கரையை கடக்கவுள்ள நிலையில், கரையை கடந்தபின் தாக்கம் 6 மணி நேரத்திற்க்கு வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 150...
- Advertisement -

#BREAKING: நிவர் புயல் எதிரொலி.. யுஜிசி NET தேர்வு ஒத்திவைப்பு.!

நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  மாநிலங்களில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்...

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு – தண்ணீர் கடலில் கலக்கும் வழித்தடம்!

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ள நிலையில் தண்ணீர் கடலில் கலக்கும் வழித்தடம் குறித்து அறிந்து கொள்ளலாம்.   வாங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் ஏற்பட்டுள்ள நிவர் புயல் காரணமாக பல இடங்களில் மக்கள் எச்சரிக்கப்பட்டு பாதுகாப்பான...

நிவர் புயல் எதிரொலி : கடலூர் முழுவதும் மின்சாரம் நிறுத்தம்.!

நிவர் புயல் கரையை தொட தொடங்கியுள்ளதால் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.எனவே கடலூரில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயலானது தற்போது கடலூரிலிருந்து 90கிலோ மீட்டர், புதுச்சேரியில் இருந்து...

Related news