இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17,265 ஆக உயர்வு.! உயிரிழப்பு 543ஆக உயர்வு.!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17,265 ஆக  உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு 21 நாள்கள் பிறப்பித்த நிலையில் மீண்டும் மேலும் மே 03 -ம் தேதி வரை ஊரடங்கை நீடித்து பிரதமர் மோடி உத்திரவிட்டார்.

இந்நிலையில், ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. இன்று முதல் பல தொழில்கள் இயங்குவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.

இதையெடுத்து,  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,116 லிருந்து 17,265 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 519 லிருந்து 543 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,302 லிருந்து 2,547ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிக பாதிக்கப்பட்ட மஹாராஷ்டிராவில் கொரோனாவால் 4,203 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இதுவரை,  507 பேர் குணமடைந்து உள்ளனர். 223 பேர் உயிரிழந்து உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author avatar
murugan