வெண்டிலேட்டர்கள் தேவைப்பட்டால் என்னிடம் உதவி கேட்கலாம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு அனைத்து நாடுகளிலும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ஈரானும் இருக்கின்றது. இங்கு 82,211 பேர் பாதிக்கப்பட்டு, 5,118 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிற நிலையில், அமெரிக்க பொருளாதார தடைகள் மற்றும் கொரோனா வைரசின் பரவலை எதிர்த்து போராடுவதற்கான தங்களது முயற்சிகளுக்கு பெரும் இடையூறாக இருப்பதாக ஈரான் அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இதையடுத்து வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது அதிபர் ட்ரம்ப் இதுகுறித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில், ஈரான் மிகவும் வித்தியாசமான நாடு என்றும் ஆரம்பத்தில் அந்த நாடு முழு மத்திய கிழக்கு பிராந்தியத்தையும் கைப்பற்ற முயற்சி செய்தது. ஆனால் தற்போது அவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் உள்ளனர். அவர்கள் கொரோனா நோயால் அவதிப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், எனக்கு இது தேவையில்லை. எனினும் அவர்கள் விரும்பினால் உதவி செய்ய நான் முன்வருவேன் என்றும் அவர்களுக்கு வெண்டிலேட்டர்கள் தேவைப்பட்டால் என்னிடம் உதவி கேட்கலாம் என கூறினார். நான் அவர்களுக்கு வெண்டிலேட்டர்களை அனுப்புவேன். மேலும் எங்களிடம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெண்டிலேட்டர்கள் உள்ளன என்று கூறியுள்ளார். இதனிடையே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.