மருத்துவ பொருள்கள் குறைவால் சிகிச்சை நிறுத்தம் – இங்கிலாந்தில் அச்சம்!

போதுமான அளவு மருத்துவ உபகரணங்கள் இல்லாமல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் கைவிட்டு விடலாம் என மருத்துவ அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இன்னும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், அதிக அளவில் இதனால் பாதிக்கப்பட்டது. இங்கிலாந்து நாடு தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,060 ஆக பதிவாகி உள்ள நிலையில், புதிதாகவும் 5,850 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிப்பு 1,20,067 ஆக அதிகரித்து உள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்கள் ஓய்வின்றி பணியாற்றக்கூடிய இந்த சூழ்நிலையில் துருக்கியில் இருந்து 44 லட்சம் பாதுகாப்பு உடைகள் வரும் என கூறி இருந்தாலும், இன்னும் வராமல் தாமதமாகவே இருந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இங்கிலாந்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் செவிலியர்கள் ஆக வேலை செய்பவர்களுக்கு அவர்களது ஒருநாள் ஊதியத்தில் 29 பவுண்டுகள் கூடுதலாக வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் உயிரை தியாகம் செய்யும் நிலை ஏற்படலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் கைவிட்டு விடலாம் என மருத்துவ அமைப்புகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 80 சுகாதார ஊழியர்கள் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மரணமடைந்துள்ளதாகவும், ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் மருத்துவ உடைகள் தேவை எனவும் சுகாதார அமைப்புகள் கூறியுள்ளது.

author avatar
Rebekal