தொடர்ந்து உயர்ந்த தங்கத்தின் விலை சற்று குறைவு.!

தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.72 குறைந்து ஒரு சவரனுக்கு ரூ.33,584 விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிவு, கொரோனா பாதிப்பு மற்றும் பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது விலை குறைந்துள்ளது ஆறுதல் அளிப்பதாக வர்த்தகர்கள் கூறினர். சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.72 குறைந்து ரூ.33,584-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.9 குறைந்து ரூ.4,198-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரத்தில், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 1.30 காசுகள் குறைந்து ரூ.49.20ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1300 குறைந்து ரூ.49,200 ஆகவும் விற்கப்படுகிறது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்