பெரியார் குறித்து சர்ச்சை கருத்து ! ரஜினிகாந்த் மீதான வழக்கில் நாளை தீர்ப்பு

ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய கோரிய மனு மீது நாளை தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த விவகாரத்தில் நடிகர் ரஜினிக்கு எதிராக பல இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தியது.பாஜகவை தவிர்த்து மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் ரஜினியின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.ஆனால் இந்த விவகாரத்தில் தான் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் ,வருத்தம் தெரிவிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

எனவே பெரியார் பற்றி அவதூறு கருத்தை தெரிவித்ததாக திராவிடர் விடுதலை கழகம் சார்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில், ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில்  நாளை தீர்ப்பு  வழங்கப்படும் என்று எழும்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது