ஆளும்கட்சி -எதிர்கட்சி இடையே விவாதம்.! ஊழியர்களை அவமதிக்கும் வகையில் போசுவதா ..?- பழனிசாமி .!

  • நேற்று  2-ம் நாள் சட்டசபை  கூட்டம் நடைபெற்றது.
  • தேர்தலை நேர்மையாக நடத்தவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு அவப்பெயர் என பழனிசாமி குற்றம் சாட்டினார்.

தமிழக சட்டசபை இந்த ஆண்டின் முதல் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.நேற்று  2-ம் நாள் சட்டசபை  கூட்டம் நடைபெற்றது.நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற வில்லை என திமுக துணை தலைவர் துரைமுருகன் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக துரைமுருகன் மற்றும் அமைச்சர்கள் வேலுமணி இடையே விவாதம் நீண்டது. பின்னர் இடைமறித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி,

உள்ளாட்சி தேர்தலில் எந்த தவறும் நடக்கவில்லை எனவும், இந்த தேர்தலை  நடத்தியதும் ,வாக்குகளை எண்ணியதும்  அரசு ஊழியர்கள் தான் அப்படி என்றால் அரசு ஊழியர்கள் தவறு செய்தார்களா..? என அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் தேர்தலை நேர்மையாக நடத்தவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சியினர் பேசுவதாக பழனிசாமி குற்றம் சாட்டினார்.

இந்த தேர்தல் பொறுத்தவரை தேர்தல் ஆணையம் முறையாக தேர்தல் நடத்தி உள்ளது.அந்த தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் நேர்மையோடும் ,நீதியோடும் நடுநிலையோடு செயல்பட்டு இருக்கிறார்கள்.அதனால் தான் 400-க்கும் மேற்பட்ட சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி வெற்றி பெற்று இருக்கிறார்கள் என கூறினார்.

author avatar
murugan