மகர விளக்கு பூஜை…..சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு…!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்க்காக சன்னிதானம், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை நடைபெற இருப்பதால் அதற்கான ஆயத்த பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் டிராக்டர்கள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து , மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவிலின் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது.
மகரவிளக்கு பூஜை காலத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு கருதி இளம் பெண்கள் யாரும் சபரிமலைக்கு வர வேண்டாம் என்று தேவசம் போர்டு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், பெண்கள் தொடர்ந்து ஐயப்பன் கோவிலுக்கு வர முயற்சிப்பதால், பம்பை, சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் வருகின்ற ஜனவரி 5-ம் தேதி வரை, 144 தடை உத்தரவை நீட்டிக்கப்பட்டுள்ளது .
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024