கேரளா முதல்வர் அதிரடி :சட்டத்தை கையில் எடுக்க அரசு அனுமதிக்காது..!!

மக்களுக்கு இடையூறாக சட்டத்தை கையில் எடுக்க யாரையும் அரசாங்கம் அனுமதிக்காது  கேரள முதல்வர்  திட்டவட்டடம்.
சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோயிலில், அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பளித்திருந்தது.
இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் போராட்டத்தால் கேரளாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலக் குழுக்கள், ‘கேரள அரசு, சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழையக் கூடாது என்று கூறும் வகையிலான அவசரச் சட்டம் இயற்ற வேண்டும்’ என்று கோரி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து போராட்டமும் நடத்தி வந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த வாரம் புதன் கிழமை சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட உள்ளதால், இன்று அனைத்து தரப்பு மக்களையும் இணைத்து ஆலோசனை , கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.இதனால் இன்று செய்தியாளர்களை சந்தித்த கேரள முதலவர் பினராய் விஜயன் , ஐயப்பன் கோவில் விவகாரத்தில் உச்சநீதிமாற்றத்தில் அரசு சார்பில்  சீராய்  மனு தாக்கல் செய்யப்படமாட்டாது. கேரள அரசாங்கம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு செயல்படுத்தப்படும்.மக்களுக்கு இடையூறாக சட்டத்தை கையில் எடுக்க யாரையும் அரசாங்கம் அனுமதிக்காது.சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வாரும் பக்க்தர்களுக்கு அரசு சார்பில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment