சின்மயி பாலியல் விவகாரம் : வைரமுத்து மீது நடவடிக்கையா? அமைச்சர் விளக்கம்
சின்மயி புகார் தந்தால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை காவல்துறை எடுக்கும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
13 வருடங்களுக்கு முன்பு ஸ்விசர்லாந்தில் ஈழத்தமிழர்களுக்காக நடைபெற்ற ‘வீழமாட்டோம் ‘ என்ற விழாவிற்கு சென்றிருந்தோம். விழா நிறைவு பெற்றதும் சின்மயி வைரமுத்து அறைக்கு சென்று அவரை பார்க்க அழைத்துள்ளனர்.
ஒத்துழைக்காவிட்டால் சினிமாவில் உங்களது கேரியர் இருக்காது என்று கூறியுள்ளனர்.கோபம் அடைந்த சின்மயி அப்படிப்பட்ட கேரியர் தேவை இல்லை என்று வந்துவிட்டாராம்.வைரமுத்து பற்றி இவர் தெரிவித்த கருத்து தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தன் மீதான பாலியம் புகார் குறித்து வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டில், ‘அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.’ என தெரிவித்தார்.வைரமுத்துவின் பதிவிற்கு ‘பொய்யன்’ என சின்மயி பதிலளித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,MeToo விவகாரம் தமிழகத்துக்கு தாமதமாக வந்துள்ளது. சின்மயி புகார் தந்தால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை காவல்துறை எடுக்கும் என்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
DINASUVADU