இரண்டு சட்டைகளை திருடியதற்காக 20 வருடம் சிறைவாசம் அனுபவித்த 67 வயது முதியவர்!

500 டாலர்களுக்கும் குறைவான 2 சட்டைகளை திருடிய குற்றத்திற்காக அமெரிக்காவை சேர்ந்த கருப்பின முதியவர் 20 ஆண்டுகளுக்குப் பின்பு தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த கருப்பினத்தவர் தான் கெய் பிராங்க். இவருக்கு தற்போது வயது 67 ஆகிறது. இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 500 டாலருக்கும் குறைவான மதிப்புள்ள இரண்டு சட்டைகளை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த குற்றத்திற்காக இவருக்கு மிகப் பெரும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு நீதிபதிகள் 23 ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை தீர்ப்பு அளித்துள்ளனர். ஆனால் இவர் கருப்பினத்தவர் என்பதால் இவருக்கு கடுமையான தண்டனை வழங்கி உள்ளதாக, சில நிறுவனங்கள் இவருக்காக வாதாடி உள்ளனர்.

எனவே இவரது தண்டனை 3 ஆண்டுகள் மட்டும் குறைக்கப்பட்டு 20 ஆண்டுகள் இவர் சிறையில் இருந்துள்ளார். இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் சிறையில் இருக்கும் பொழுது இவரது மனைவி, மகன் மற்றும் இரண்டு சகோதரர்கள் ஆகியோரும் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ள முதியவர் கெய் பிராங்க் அவர்களுக்காக பலரும் சமூக வலைத்தளத்தில் ஆதரவு தெரிவித்து வருவதுடன், “கோ பண்ட் மீ” எனும் பக்கத்தில் நிதி திரட்டப்பட்டு வருகிறது.

author avatar
Rebekal