60 மதுபாட்டில் மாயம்…பொறி வைத்து எலியை கைது செய்த போலீசார்..!

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்ட காவல் நிலையத்தில் மயமான 60 மதுபாட்டில்களை அனைத்தையும் எலிகள் குடித்துவிட்டதாக காவல்துறை கூறியுள்ளது. சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுபானத்தை சிந்த்வாரா மாவட்ட காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது. மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதனால், நீதிமன்றத்தில் மதுபாட்டில்கள் சாட்சியங்கள் காட்டப்பட வேண்டும் என்பதால் கைப்பற்றப்பட்ட மதுபானங்கள் அனைத்தும் காவல் நிலையத்தின் ஒரு  கட்டிடத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், 60-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை எலிகள் குடித்து காலி செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு எலிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து ஒரு எலியையும் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், காவல் நிலையத்தில் எலிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சுமார் 60 முதல் 65 மதுபானங்களை எலிகள் குடித்து உடைந்துள்ளது. அவற்றை சுத்தம் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திஉள்ளோம். இதையடுத்து எலிகளை பிடிக்க கூண்டுகள் கொண்டு வரப்பட்டு ஒரு எலியை பொறி வைத்து பிடிபட்டுள்ளது. மற்ற எலிகள் தப்பி ஓடிவிட்டன. நாங்கள் கைப்பற்றி வைக்கும் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

இது தவிர, கிடங்கில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை எலிகள் தொடர்ந்து சேதப்படுத்துவதாக கூறினார். பல நேரங்களில் முக்கிய ஆவணங்களையும் அழித்து விடுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், நிறைய சிக்கல்கள் எழுகின்றன. சில நேரங்களில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை இரும்புப் பெட்டியில் வைதத்து பாதுகாக்கவேண்டிய சூழல் உள்ளது என கூறினார்.

author avatar
murugan