"55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் " தமிழக அரசு அனுமதிக்க கூடாது.மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்..!!

“55 மண்டலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. கடலில் இரண்டு மண்டலங்கள், பூமியில் ஒரு மண்டலம் என ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு இடங்கள் வேதாந்தா குழுமத்துடன் ஒப்பந்தமாகி உள்ளது. தரை மண்டலத்தை பொறுத்தவரை குள்ளஞ்சாவடி முதல் தரங்கம்பாடி வரையிலான மண்டலம் ஓஎன்ஜிசிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
Image result for ஹைட்ரோ கார்பன்
 
காவிரி பாசன மண்டலத்தை பசுமை மண்டலமாக பராமரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மக்களுடைய எதிர்ப்பை மீறி  ஹைட்ரோ கார்பன் எடுக்க முயற்சித் தால் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தும். மத்திய அரசோடு இணக்க மாக உள்ள தமிழக அரசு, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கொடுக்க மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும்’’என்று மார்க்சிஸ்ட் கட்சி கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழக அரசை வலியுறுத்துகியுள்ளார்.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment