50-வது படம் பிளாக்பஸ்டர்! வசூலில் மிரட்டும் மகாராஜா!

50-வது படம் பிளாக்பஸ்டர்! வசூலில் மிரட்டும் மகாராஜா!

maharaja 2024

மகாராஜா : விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமான ‘மகாராஜா’ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூன் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், பாரதிராஜா, அனுராக் காஷ்யப், அபிராமி, முனிஷ்காந்த், தேனப்பன் பி.எல்., நடராஜ சுப்ரமணியன், சிங்கம்புலி, அருள்தாஸ், மணிகண்டன், வினோத் சாகர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  படம் பார்த்த அனைவரும் பாசிட்டிவான விமர்சனங்களை மட்டுமே கூறி கொண்டு வருகிறார்கள். படம் அருமையாக இருப்பதன் காரணமாகவே இந்த அளவுக்கு படத்திற்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. வரவேற்புக்கு ஏற்றது போல வசூலிலும், படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.

உலகம் முழுவதும் 2000 திரையரங்குகளில் வெளியான இந்த மகாராஜா படம் முதல் நாளில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, படம் உலகம் முழுவதும் 7 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும், இந்தியாவில் மட்டும் 4 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமாவில் இருக்கும் எல்லா நடிகர்களுக்கும் அவர்களுடைய 50-வது திரைப்படம் வெற்றி படமாக அமையும் என்று இல்லை. ஒரு சில நடிகர்களுக்கு மட்டுமே 50-வது படம் வெற்றி படமாக அமைந்து இருக்கிறது. அதில் நடிகர் விஜய் சேதுபதிக்கும் அவருடைய 50-வது படம் வெற்றி படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube