50,000 பேர் பலி.. 3 ஆண்டுகளில் இரயில் விபத்தால் வந்த சோகம்…

கடந்த 3 ஆண்டுகளில் ரயில் விபத்தால் சுமார் 50,000 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய இரயில்வே அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ஜோதா பதக் என்ற இடத்தில் தசாரவையொட்டி ராவண வதம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, தண்டவாளத்தில் நின்று நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது ரயில் மோதியதில் 62 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், கடந்த 3 ஆண்டுகளில் ரயில் விபத்தால் சுமார் 50,000 பேர் உயிரிழந்துள்ளதாக  இந்திய இரயில்வே அதிகாரப்பூர்வ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக கூறியிருப்பதாவது:
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை ரயில் மோதி இறந்தவர்களின் எண்ணிக்கை 49,790 ஆகும். அதில் அதிகப்படியனா விபத்து வடக்கு ரெயில்வே மண்டலத்தில் நடந்துள்ளது. வடக்கு ரெயில்வே மண்டலத்தில் 7,908 பேர் இறந்துள்ளனர். தெற்கு ரெயில்வே மண்டலத்திலிருந்து 6,149 பேரும், கிழக்கு ரயில்வே மண்டலத்திலிருந்து 5,670 பேர் இறந்துள்ளனர்.இந்தியன் இரயில்வே போலிஸ் விபத்து குறித்த தகவல்களை மண்டல வாரியாக அளித்துள்ளனர். இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
DINASUVADU
author avatar
Dinasuvadu desk

Leave a Comment