#INDvsENG : டெஸ்டில் ‘500’ விக்கெட்டை வீழ்த்தி அஸ்வின் சாதனை ..!

இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3வது  டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இதில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 445 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக ஜோடி சேர்ந்து  விளையாடிய ரோஹித் மற்றும் ஜடேஜா இருவரும் சாதம் விளாசி அசத்தினார்.

#INDvENG : முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்த இந்தியா..!

அதன் பின் இரண்டாம் நாளின், 3வது செஷனில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரரான பென் டக்கெட் மற்றும் சாக் கிராலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரின் விக்கெட்டை எடுக்க முடியாத நிலையில் இந்திய அணி திணறியது. அப்போது அஸ்வின் தனது அட்டகாசமான பந்து வீச்சில் சாக் கிராலி விக்கெட்டை வீழ்த்தி அந்த பார்ட்னெர்ஷிப்பை உடைத்தார். இந்த போட்டியில் எடுத்த இந்த விக்கெட்டின் மூலம் டெஸ்டில் அஸ்வின் தனது 500வது விக்கெட்டை வீழ்த்தினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்றும் புதிய சாதனையையும் படைத்துள்ளார். 619 விக்கெட்டுகளுடன் கும்ப்ளே முதலிடத்தில் உள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் 2வது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வினுக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment