நளினி உள்ளிட்ட 5 பேர் விடுதலை – நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

உச்சநீதிமன்ற நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான அமர்வு விடுதலைக்கோரும் 5 பேரின் வழக்கு மீது நாளை விசாரணை.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பாக நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த பதில் மனுவில் ஏழு பேர் விடுதலையில் குடியரசு தலைவர் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். எனவே, பேரறிவாளனை ஏற்கனவே நீதிமன்றமே விடுவித்ததை போலவே, நளினி, ரவிச்சந்திரன் விடுதலை விவகாரத்திலும் நீதிமன்றமே முடிவெடுக்கலாம். குற்றம்சாட்டப்பட்ட மீதமுள்ள 6 பேரும் விடுதலை கோர சட்ட வழிவகை ஏற்பட்டது.

நளினி, ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் எடுக்கும் முடிவை அரசு ஏற்கும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி பேரறிவாளனை உச்சநீதிமன்றம் தன் அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது. இதன்பின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்ததை மேற்கோள்கட்டி, தங்களையும் விடுவிக்க வேண்டும் என நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.

இந்த சமயத்தில் தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில், விடுதலை செய்யக்கோரி நளினி உள்பட 5 பேர் தாக்கல் செய்த மனுவை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்ற நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான அமர்வு நாளை வழக்கை விசாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ராபர்ட் பயாஸ், சாந்தன், ஜெயக்குமார் உள்ளிட்ட 3 பேரும் முன்கூட்டியே விடுதலை கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment