உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் ஒரு தூயர சம்பவம்:49 பச்சிளங் குழந்தைகள் பலி..!

உத்தரப்பிரதேசம், பருக்காபாத் மாவட்ட மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 49 பச்சிளங் குழந்தைகள் இறந்துள்ள விவரம் இப்போது வௌியாகியுள்ளது.
ஏற்கனவே கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை, மூளை அழற்ச்சி நோயால் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடந்த மாதம் இறந்த அதிர்ச்சி நடந்த நிலையில் பருக்காபாத்திலும் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மருந்துகள் வழங்காதது, ஆக்சிஜன் வழங்குவதில் ஏற்பட்ட தாமதமே குழந்தைகள் இறக்க முக்கியக் காரணம் என்று குழந்தைகளை பறிகொடுத்த தாய்மார்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

Leave a Comment