4,061 கிலோ மீட்டர் கால்வாய்கள் தூர்வாரப்படுகின்றன- முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

  • மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்று சேர்வதை அரசு உறுதி செய்யும்.
  • ரூ.65.10 கோடியில் சுமார் 4 ஆயிரத்து 61 கிலோ மீட்டர் கால்வாய்கள் தூர்வாரப்படுகின்றன என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையைத் திறந்து வைத்த முதலமைச்சர் பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மேட்டூர் அணையின் வரலாற்றில் 88-ஆவது முறையாக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணை நீர் கடைமடை வரை சென்று சேர ரூ.65.10 கோடி மதிப்பில் 647 தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது. தூர்வாரும் பணிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம் செய்யபப்ட்டுள்ளனர்.

மேட்டூர் அணையை ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி திறந்து வைப்பதில் அரசு உறுதியாக உள்ளது. உழவர் அமைப்புகளை கலந்து ஆலோசித்து தூர்வாரும் பணி மேற்கொள்ளப் பட்டுள்ளது. ரூ.65.10 கோடியில் சுமார் 4 ஆயிரத்து 61 கிலோ மீட்டர் கால்வாய்களை தூர்வாரப்படுகின்றன. குறிப்பிட்ட நாளில் மேட்டூர் அணை திறப்பதன் மூலம் சரியான காலத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கிறது.

மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்று சேர்வதை அரசு உறுதி செய்யும். 10 ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் நிகர பயிரிடும் பரப்பு 60 சதவீதத்தில் இருந்து75 சதவீதமாக அதிகரிக்கப்படும். நிகர பயிரிடும் பரப்பு ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்க நடவடிக்கை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திருச்சி மாநாட்டில் உறுதியளித்தபடி வேளாண் துறைக்கு திமுக முக்கியத்துவம் அளிக்கும். அனைவருக்கும் உயர்கல்வி, மருத்துவம் என்ற இலக்கை எட்ட திட்டமிட்டுள்ளோம்.

அமைச்சர்கள் மேட்டூர் அணையைத் திறந்து வந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு மாறியது. அதிமுகவின் முதல் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையைத் திறந்த நிலையில், திமுகவின் முதல் முதல்வராக மு.க.ஸ்டாலின் அணையைத் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan